ஓடும் ரயிலிருந்து கர்ப்பிணியை தள்ளிய கொடூரன்
ஓடும் ரயிலிருந்து கர்ப்பிணியை தள்ளிய கொடூரன்முகநூல்

ஓடும் ரயிலிலிருந்து கர்ப்பிணியை தள்ளிய கொடூரனுக்கு ... சாகும்வரை சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

ஜோலார்பேட்டை காவல் துறையினர் ரயிலில் இருந்து கீழே தள்ளி, கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் ஹேமந்த் ராஜ் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி, கொலை முயற்சி என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
Published on

ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த 4 மாத கர்ப்பவதி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். கர்ப்பமாக இருந்த மனைவியை, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சித்தூர் மாவட்டத்துக்கு அவரது கணவர் ரயிலில் அனுப்பி வைத்தார். கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பொது பெட்டியில் அந்த கர்ப்பிணி பயணம் செய்தார்.

மறுநாள் 7ம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் - கே.வி.குப்பம் இடையே ரயில் சென்றபோது, ரயிலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த அவர் சென்றார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, ஓடும் ரயிலில்இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்ட இளைஞர், வேறு பெட்டிக்கு மாறி தப்பினார்.

இதனால், அப்பெண்ணின் கை, கால் முறிவு ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமல்ல , ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் ரயிலில் இருந்து கீழே தள்ளி, கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் ஹேமந்த் ராஜ் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை முயற்சி, கொலை முயற்சி என 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம், ஹேமந்த் ராஜை கடந்த 11 ஆம் தேதி குற்றவாளி என அறிவித்திருந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரம் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலிருந்து கர்ப்பிணியை தள்ளிய கொடூரன்
“எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன்” - அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த ஓபிஎஸ்!

தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி மீனாகுமாரி , ‘ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்ட ஹேமராஜூக்கு, 7 பிரிவுகளின்கீழ் ஆயுள் முழுவதும், அதாவது சாகும்வரை சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே சார்பில் ரூ.50 லட்சம்,தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com