\
ஹெல்மேட் அணிந்தவர்களுக்கு பரிசாக திருக்குறள்

ஹெல்மேட் அணிந்தவர்களுக்கு பரிசாக திருக்குறள்

ஹெல்மேட் அணிந்தவர்களுக்கு பரிசாக திருக்குறள்
Published on

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஹெல்மேட் அணிந்திருந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு வரும் இரு சக்கரவாகன ஓட்டிகள் அதிவேகமாக வருதால் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் அவர்களது வாகனங்களை பதிவு செய்யாமலும், ஓடுநர் உரிமம் இல்லாமலும் ஓட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளில் ஆய்வாளர் அன்பழகன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்துகள் கூறி கையொப்பம் இட்ட திருக்குறள் புத்தகத்தை வழங்கினர் ஆய்வாளர் அன்பழகன். திருக்குறள் புத்தகத்தை பரிசாக காவல்துறையினர் வழங்குவது ஊக்கப்படுத்துவதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com