மதுரையில் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம் ரத்து

மதுரையில் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம் ரத்து

மதுரையில் ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் உரிமம் ரத்து
Published on

மதுரை மாநகரில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஒட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இன்று முதல் கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து மீறினால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதனைக் கண்காணிக்க, மதுரை மாநகரில், போக்குவரத்து காவல்துறை சார்பில் 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, மதுரை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 954 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மதுரையில் கடந்த ஆண்டி‌ல் சாலை விபத்துகளில் 225 பேர் உயிரிழந்ததாகவும், இரு சக்கர வாகனங்களில் சென்று உயிரிழந்தவர்களில், 90 சதவிகிதம் பேர் ஹெல்மெட் அணியாததால் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஹெல்மெட் அணி‌வதைக் கட்டாயமாக்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com