ஓ.எம்.ஆர் சாலையில் திடீர் பள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்

ஓ.எம்.ஆர் சாலையில் திடீர் பள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்

ஓ.எம்.ஆர் சாலையில் திடீர் பள்ளம்: கடும் போக்குவரத்து நெரிசல்
Published on

சென்னை ஓஎம்ஆர் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை பெருங்குடி சுங்கச்சாவடி அருகே இன்று காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் இந்த சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சோதனை மேற்கொண்டத்தில், மெட்ரோ குடிநீர் குழாய் உடைந்ததில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பின்னர் டிராக்டர் மூலம் மணல் கொண்டுவரப்பட்டு பள்ளத்தை மூடிச் சென்றனர். ஒரு மணி நேரம் போராடி அதை சரி செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com