போக்குவரத்து நெரிசல்pt desk
தமிழ்நாடு
தொடர் விடுமுறை: தென்மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை காரணமாக செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்: உதயகுமார்
தொடர் விடுமுறையை முன்னிட்டு தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களால் பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்று சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை என தொடர் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்pt desk
இந்நிலையில், சென்னையில் இருந்து அதிகப்படியான கார்கள் தென்மாவட்டங்களை நோக்கி செல்வதால் பரனூர் சுங்கச் சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருந்து கடந்து செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுங்கச் சாவடியில் கூடுதலாக ஒரு கவுண்டர் துவங்கப்பட்டு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.