\
வழக்கறிஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் - 5 கி.மீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வழக்கறிஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் - 5 கி.மீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

வழக்கறிஞர் பிறந்தநாள் கொண்டாட்டம் - 5 கி.மீட்டருக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
Published on

பட்டாபிராமில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தால் 1 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் 5 கி.மீ வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஆவடி அருகே பட்டாபிராமில் வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆவடியில் இருந்து பட்டாபிராம் வரை சுமார் 100 க்கும் மேற்பட்டோர் செண்டை மேளம், தாரை தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம் என ஊர்வலம் சென்று வருகின்றனர். இதனால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சிடிஎச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இவர்கள் ஆவடியில் இருந்து ஊர்வலமாக செல்வதால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கறிஞர் ஒருவரின் கொண்டாட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com