பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்: 3வது நாளில் பூவிருந்தவல்லியில் கடும்போக்குவரத்து நெரிசல்

பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்: 3வது நாளில் பூவிருந்தவல்லியில் கடும்போக்குவரத்து நெரிசல்
பொங்கல் சிறப்பு பேருந்து இயக்கம்: 3வது நாளில் பூவிருந்தவல்லியில் கடும்போக்குவரத்து நெரிசல்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பூந்தமல்லியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், திருப்பதி ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும்  அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் முதல் இரண்டு நாட்களில் சொந்த ஊர்களுக்கு குறைந்த அளவே பொதுமக்கள் சென்றனர்.

இதற்கு முக்கிய காரணம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறுவதாலும், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத காரணத்தினால்  குறைந்த அளவே பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். மூன்றாம் நாளான இன்று கணிசமாக பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக இன்று 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றது.

அதேபோல் வழக்கமாக இயங்கிவரும் 532 பேருந்துகள் என பூந்தமல்லியிலிருந்து மட்டும் 752 பேருந்துகள் இன்று இயங்கிவருகின்றது. இதன் காரணமாக பூவிருந்தவல்லி நகரத்திற்குள் கடும் போக்குவரத்து நெரிசல் இன்று ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர்  பூந்தமல்லி பஸ் நிலையம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஆங்காங்கே பொதுமக்கள் முக கவசம் மற்றும் சமூக விலகலை கடைபிடிக்காமல் செல்லும் காட்சிகளும் காண முடிகிறது. பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து செல்ல போலீசார் அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com