\
கன்னியாகுமரி: குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - மீனவர்கள் அவதி

கன்னியாகுமரி: குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - மீனவர்கள் அவதி

கன்னியாகுமரி: குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு - மீனவர்கள் அவதி
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசைப்படகு மீனவர்கள் சுமார் 7-முதல் 10-நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடிப்பதும் பைபர் படகு மீனவர்கள் தினம் தோறும் அதிகாலை கடலுக்கு சென்று மீன்பிடித்து அன்றே திரும்புவதும் வழக்கம்.

தற்போது குளச்சல் சுற்றுவட்டார கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு மற்றும் நீரோட்ட மாறுபாடு காரணமாக கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லாத நிலையில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை மீனவர்கள் கரையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com