பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்னைவாசிகள் திரும்புவதால் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பொங்கல் பண்டிகையின் சிறப்பு நிகழ்வாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை அடுத்து, பெரும்பாலானோர் நேற்றிரவே சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், பொதிகை, முத்துநகர் விரைவுரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. செண்ட்ரல் ரயில் நிலையத்திலும் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டிரைக் முடிவடைந்துவிட்டதால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இன்று காலை முதலேகூட்டம் அதிகமாக இருந்தது.