\
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும்: வானிலை மையம்
Published on: 

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27ஆம் தேதியன்று சேலம், தேனி, திண்டுக்கல், அரியலுர், பெரம்பலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு 29ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com