Saravananpt desk
தமிழ்நாடு
நெல்லை: பெருமழை பாதிப்பு - பெரும் சிக்கலில் புகைப்பட கலைஞர்கள்
நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கன மழையால், புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கை பொலிவிழந்துள்ளது.
வண்ணாரப்பேட்டை, நெல்லை டவுன், சிந்து பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் புகைப்பட கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் காரணமாக, புகைப்பட கலைஞர்களின் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி, கேமரா உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
Camerapt desk
இதனால் வாடிக்கையாளர்கள் கொடுத்த ஆர்டர்களை முடித்துக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகைப்பட கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நம்மிடையே பேசியவற்றை, இங்கே காணலாம்...