rainpt desk
தமிழ்நாடு
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நேற்று இரவு முதல் சென்னை முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தேனாம்பேட்டை, எழும்பூர் மற்றும் வடசென்னை வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, திருவொற்றியூர், பெரம்பூர், உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
chennai rainpt desk
சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன் நகர், செல்வாநகர் பிரதான சாலை உள்ளிட்ட தெருக்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளையும் மழை சூழ்ந்துள்ளது. சாலைகளும் படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இதனால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் மழைநீரை உடனடியாக அகற்றி, அப்பகுதியை சீரமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.