\
நீலகிரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நீலகிரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நீலகிரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
Published on

நீலகிரி மாவட்டத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டிருக்கும் நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சிதலைவர் கீர்த்தி பிரியதர்ஷினி, “பொதுமக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். கன மழை பாதிப்பினை எதிர்கொள்ள 42 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர், 456 தற்காலிக முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கன மழையால் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாகவும் அதில் 22 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக கண்டறியபட்டுள்ளது. அந்த 22 இடங்களிலும் தாசில்தார் தலைமையில் குழுக்கள் 24 மணி நேரமும்  கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அபாயகரமான மரங்கள் தொடர்ந்து வெட்டபட்டு வருகிறது, எனவே பொதுமக்கள் அச்சபட தேவையில்லை. அவசர உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்று தெரித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com