தமிழ்நாடு
மதுரையில் கனமழை: மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
மதுரையில் கனமழை: மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நேற்று இரவு பெய்த கன மழையில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியில் உள்ள கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லையா என்பவரின் மகன் மாரிசாமி (37). இவருக்கு சொந்தமாக 16 ஆடுகள் உள்ளன. மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் செல்வம் (36) என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் என மொத்தம் 21 ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு இருவரும் மாடுகளை மேய்க்கச் சென்று விட்டனர்.
இந்நிலையில், மாடு மேய்ச்சலை முடித்துவிட்டு நேற்று இரவு அவர்கள் வந்து பார்த்தபோது இரவு இடி மின்னலுடன் பெய்த கன மழையில் மின்னல் தாக்கி 21 ஆடுகளும் பரிதாபமாக இறந்து கிடந்தன. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.