தமிழ்நாடு
கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கனமழை: கடலுக்குச் செல்லாத மீனவர்கள்
கன்னியாகுமரியில் விடிய விடிய பெய்த கனமழை: கடலுக்குச் செல்லாத மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆயிரத்திற்கும் அதிகமான பைஃபர் படகுகள் மற்றும் விசை படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
குளச்சல், தக்கலை, அழகிய மண்டபம், திங்கள் சந்தை ஆகிய சுற்றுப்பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் கனமழை நீடிப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறுமடை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான கட்டுமரம், பைஃபர் படகுகள் மற்றும் நூற்றிற்கும் அதிகமாக விசை படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.