தமிழ்நாடு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை: மின்தடையால் மக்கள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மழை: மின்தடையால் மக்கள் அவதி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், குமணன்சாவடி,காட்டுப்பாக்கம், சென்னீர்குப்பம், ஆவடி , திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூரில் இடியுடன் கன மழை பெய்தது. வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், அம்பத்தூர், பாடி,கொரட்டூர் முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
மழை காரனமாக பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.