\
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
Published on

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு,சேலம்,தேனி, நெல்லை,‌ கோவை , நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய 11 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய வங்கக்க‌டல் மற்றும் அதையொட்டி‌ய தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com