\
கனமழையால் பாதிப்பில்லை: அமைச்சர் துரைக்கண்ணு

கனமழையால் பாதிப்பில்லை: அமைச்சர் துரைக்கண்ணு

கனமழையால் பாதிப்பில்லை: அமைச்சர் துரைக்கண்ணு
Published on

தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்க‌ண்ணு தெரிவித்துள்ளார். 

கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் வெள்ளம் போல் காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்க‌ண்ணு பங்கேற்றார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும் மழையினால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் கூறினார். அதே போல் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வழக்கம் போல் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாகவும் துரைக்கண்ணு தெரிவித்தார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com