தீவிர புயலாக ‘மோன்தா’ புயல் வலுப்பெறும்.. 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
தென்கிழக்கு, மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலைய்ல், அது தீவிர புயலாக உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நாளை மறுநாள் ‘மோன்தா’புயல் உருவாக உள்ளது.
வங்கக்கடலின்தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவியஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்காக நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த தாழ்வுமண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை காலைக்குள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்குவங்கக்கடலில் ‘மோன்தா’ புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காக்கிநாடா அருகே வரும் 28ஆம் தேதி தீவிர புயலாககரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்றுகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதேபோல், சென்னை, திருவள்ளூர்,ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நாளை ஆரஞ்சுஅலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புளளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

