கனமழை எச்சரிக்கைpt
தமிழ்நாடு
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 12ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி. தஞ்சை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழைweb
மேலும் வரும் 13ஆம் தேதி நெல்லை, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

