கனமழை எச்சரிக்கைpt
தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை - தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு!
தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில், வரும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பேரிடர் மீட்பு படை உதவி ஆய்வாளர் தலைமையில் 27 பேர் கொண்ட குழு ரப்பர் படகு, லைஃப் ஜாக்கெட், விபத்துகளில் உதவும் ஸ்ட்ரெச்சர், 2.5 கிலோ வோல்ட் திறன் கொண்ட இரு ஜெனரேட்டர்கள், பெரிய மரங்களை அறுக்கும் ரம்பம் உள்ளிட்ட 43 வகையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது.