கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் வழியாக நமக்கு தெரியவருபவை:

“கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று அதிகனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் கன்னியாகுமரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன முதல் மிக கன மழையும் - சில இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது 17-ம் தேதி மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்படுகிறது. முன்னதாக இது 15-ம் தேதி வலுப்பெறுமென கணிக்கப்பட்டது. தற்போது அது மேலும் இரு தினங்களுக்கு தாமதமாகியுள்ளது. தெற்கு அந்தமானில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மத்திய அந்தமானுக்கு நகர்ந்துள்ளது. தொடர்ந்து அது மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரு சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சம் வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்”

ஏற்கெனவே கடந்த 3 நாள்களுக்காக கன்னியாகுமரியில் கனமழை பெய்துவரும் நிலையில், நேற்று மட்டும் அங்கு பெரும்பாலான இடங்களில் சராசரியாக 10 செ.மீ.க்கும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பெருஞ்சாணை அணை, குத்தன் அணைகளில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரிக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com