நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் – பிரதீப் ஜான்

தென்மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
heavy rain
heavy rainpt desk

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாது கனமழை பெய்யும் என்றும். நெல்லை மாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

rain
rain pt desk

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி கொள்ளளவு நீர்வரத்து உள்ளதாலும், உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழைநீர் இன்று (17.12.2023) வரும் என கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

rain
rainpt desk

மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com