தீவிர மழையை கொடுக்கக்கூடிய மேகங்கள்... சென்னை கரையை தொட்டது! - வானிலை மையத்தின் அதிரடி அறிவிப்பு!
தீவிர மழையை கொடுக்கக்கூடிய மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..இதனால், சென்னையில் ஒரு சில இடங்களில் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கொடுத்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, சென்னையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலைக்கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல்.. நாகையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. ஆனால், இதன் நகர்வில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இது மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மேலும், இது மேற்கு , வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் - மகாபலிபுரத்திற்கு இடையே புயலை கடக்கும். படிப்படியாக தீவிர மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.மேலும், பகல் நேரத்தில் அதிக மழையை கொடுக்கக்கூடியதாக இந்த புயல் இருக்கும்.