\
கனமழை : தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை : தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை : தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

தொடர் கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், சிலமாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக நாளை தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com