தீவாக மாறிய நடுக்கட்டை கிராமம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்த வேதனை

தீவாக மாறிய நடுக்கட்டை கிராமம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்த வேதனை

தீவாக மாறிய நடுக்கட்டை கிராமம்: வீட்டிலேயே பிரசவம் பார்த்த வேதனை
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கனமழை வெள்ளத்தால் ஒரு கிராமமே தீவாக தனித்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடியாத்தம் அருகே நடுக்கட்டை கிராமத்தில் 70க்கும் அதிகமான குடும்பங்கள் ‌வசித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையாலும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கன மழையாலும் குடியாத்தம் மோர்தனா அணை நேற்று நிரம்பி வழியதொடங்கியது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நடுக்கட்டை கிராமத்தின் இருபுறமும் ஆறு இருப்பதால்  ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அந்தக் கிராமம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியே வர இயலாமல் அவதிப்பட்டு வருவதாகவும், பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிபட்டு வருவதாகவும், எவ்வித வசதியும் இன்றி அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கிராமத்தை விட்டு வெளியே வர இயலாமல் உள்ளதாகவும் கூறுகின்றனர். 

இந்நிலையில் நேற்று இரவு இளம்பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாமல் கிராமத்திலேயே பிரசவம் பார்க்கப்பட்டதாகவும் மிகவும் வேதனையுடன் கூறுகின்றனர் கிராம மக்கள். 20ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற நிலை ஏற்பட்டதாகவும் அன்று முதல் கிராமத்திற்கு சிறிய பாலம் அமைத்துத்தரக் கோரியும் இதுவரை நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com