\
டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on: 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப்பகுதியை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்'' எனத் தெரிவித்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com