
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைபெய்யக் கூடும் என்றும், இரண்டு புயல் சின்னங்கள் உருவாகி இருந்தாலும் அந்த புயல் சின்னங்கள் தமிழ்நாட்டை நோக்கி வராத காரணத்தால் தமிழ்நாட்டில் மிதமான மழைபெய்யவே வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல் சின்னம் நிலைகொண்டுள்ளதாலும், 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.