தமிழ்நாடு
வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிக்கு அருகே செல்லவே தடை
வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிக்கு அருகே செல்லவே தடை
நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிப்பக்கம் செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அருவிகளுக்கு 50 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. கனமழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு அருகே செல்லவே தடை விதிக்கப்பட்டுள்ளது.