\
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 2-வது நாளாக தொடர் சாரல்!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 2-வது நாளாக தொடர் சாரல்!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 2-வது நாளாக தொடர் சாரல்!
Published on

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று இரவிலும் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று இரவிலும் சாரல் மழை பெய்தது. கடந்த இரண்டு மாதங்களாக மழை முற்றிலும் ஓய்ந்ததால், இந்த பகுதிகளில் வறண்ட சூழல் காணப்பட்டது. மேலும், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்தும் மிகவும் குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் சிறு சாரல் மழையால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கிடந்த ஏலக்காய் தோட்டங்களுக்கு இந்த சாரல் ஓரளவு கைகொடுப்பதால், இடுக்கி மாவட்ட விவசாயிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com