நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரை மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை

நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரை மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை
நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரை மணிநேரத்திற்கு மேலாக பலத்த மழை

நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. உதகை, குன்னூர், கோத்தகிரியில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இந்த பரவலான மழைக் காரணமாக உதகையில் கடும் குளிர் நிலவி வருகிறது. காலை வரை அதிகபட்சமாக பந்தலூரில் 135 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கல்லட்டி மற்றும் கெத்தையில் 3 மில்லிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைமணிநேரம் பலத்த மழை பெய்தது. சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம், பீக்கிரிபாளையம், ராம பையலூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கி பின்னர் பலத்த மழையாக மாறியது. சுமார் அரை மணி நேரம் மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com