தமிழ்நாடு
கோவையில் நேற்று கனமழை - இன்று கடும் பனிமூட்டம்
கோவையில் நேற்று கனமழை - இன்று கடும் பனிமூட்டம்
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பனிமூட்டத்தால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

