கனமழை எதிரொலி... சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் தலைநகர் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையிலிருந்து பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்த நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் உணவுகள் சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழையினை முன்னிட்டு இன்று காலை 1,46,950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அத்துடன், சென்னையில் வடகிழக்கு பருவமழையொட்டி நிவாரண முகாம்களில் தங்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்தும், அங்கு என்னென்ன வசதிகள் செய்யப்படு வருகின்றன என்பது குறித்தும் செய்தியாளர் சுரேஷ்குமார் அளித்த விளக்கங்களை இந்த வீடியோ காணொலியில் பார்க்கலாம்..