வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு
Published on

கனமழை காரணமாக,சென்னை கொரட்டூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. 

சென்னையில் நேற்று முதல் பெய்த மழையால் கொரட்டூர் 84ஆவது வார்டு டிடிபி காலணியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. தரைத்தளம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசி‌க்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதாகக் கூறுகின்றனர். நேற்று முதல் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருந்துகின்றனர். மேலும், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் கழிவு நீரும் மழைநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது மண்டல பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி சுபேஸ்குமார் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவலலதுறையினரும் பாதுகாப்பு பண‌யில் ஈடுபட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com