rain pt desk
தமிழ்நாடு
சென்னையில் விட்டு விட்டு பெய்த கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றின் வேகமாறுபாடு ஆகியவற்றின் காரணமாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Rain in Chennaipt desk
இந்த சூழலில் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, அடையாறு, அண்ணாசாலை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது.
அதேபோல் ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பொழிந்தது. ஆவடியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதியடைந்தனர்.