\
அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழை

அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழை
Published on

அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தி.மலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2:30 மணி வரை திரூரில் 8.5 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்தில் 6.2 செ.மீ. மழையும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 5.6 செ.மீ. மழையும், மேற்கு தாம்பரத்தில் 4.7 செ.மீ. மழையும், காட்டுப்பாக்கத்தில் 3.5 செ.மீ. மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com