\
நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு‌ மையம் தகவல்

நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு‌ மையம் தகவல்

நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு‌ மையம் தகவல்
Published on

நாளையும் நாளை மறுநாளும் கடலோர மாவட்டங்கயில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, டெல்லியில் உள்ள தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தமிழகத்தை ஒட்டியுள்ள கடற் பகுதியில் நிலைகொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com