சென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி

சென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி

சென்னை, திருவள்ளூர், விழுப்புரத்தில் மழை : மக்கள் மகிழ்ச்சி
Published on

சென்னை, திருவள்ளூர் உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கோடைக்காலம் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையில் கடந்த 5 நாட்களில் 3 முறை மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அத்துடன் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. 

இதற்கிடையே வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், போரூர், கிண்டி, ஆவடி, அம்பத்தூர், கொரடூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துகொண்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தனி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் விழுப்புரத்திலும் மழை பெய்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தால் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com