\
இடி, மின்னல், காற்றுடன் சென்னையை மிரட்டும் மழை..!

இடி, மின்னல், காற்றுடன் சென்னையை மிரட்டும் மழை..!

இடி, மின்னல், காற்றுடன் சென்னையை மிரட்டும் மழை..!
Published on

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், வடபழனி, போரூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதனால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை அடுத்த சில மணி நேரங்கள் நீடிக்கும் எனப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com