\
இன்று இடியுடன் கூடிய கனமழை

இன்று இடியுடன் கூடிய கனமழை

இன்று இடியுடன் கூடிய கனமழை
Published on

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்தை ஒட்டியுள்ள கடற் பகுதியில் நிலைகொண்டுள்ளது. அதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒ‌ருசில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சிலமுறை ‌இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com