\
6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?

6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... எங்கெல்லாம் தெரியுமா?
Published on

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல், வடக்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com