\
தமிழகம், புதுச்சேரியில் இன்றும் கனமழை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் கனமழை

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் கனமழை
Published on: 

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்றும் கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் ‌புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் ஒருசில நேரத்தில்‌ ‌கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நேற்று அதிகபட்சமாக பொன்னேரியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 
கடலூரில் 9 செமீ, ஆனைக்காரன் சத்திரம், பரங்கிப்பேட்டை, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 7 செமீ, தாமரைப்பாக்கம், மரக்காணம், மணிமுத்தாறு, சீர்காழியில் 6 செமீ, சோழவரம், சாத்தான்குளம், ஜெயங்கொண்டம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், புதுச்சேரி, காரைக்காலில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 2, 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை தொடர்ந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com