தமிழ்நாடு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நேற்று இரவு சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்த நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
போலவே ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்; ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; சென்னையை பொறுத்தவரை, வெப்பநிலை அதிகபட்சமாக 32 செல்சியஸ் என்றும் குறைந்தபட்சம் 25 செல்சியஸ் என்றும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, நாளை (நவம்பர் 18) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

