முடிவுக்கு வருகிறது அக்னி நட்சத்திரம்! இனியாவது குறையுமா கோடையின் வெப்ப அலைகள்?

முடிவுக்கு வருகிறது அக்னி நட்சத்திரம்! இனியாவது குறையுமா கோடையின் வெப்ப அலைகள்?
முடிவுக்கு வருகிறது அக்னி நட்சத்திரம்! இனியாவது குறையுமா கோடையின் வெப்ப அலைகள்?

தமிழ்நாட்டில் கடந்த 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிகிறது.

ஆண்டுதோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் 'அக்னி நட்சத்திரம்' என அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்குவது வழக்கம். இக்காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெறுகிறது. கடந்த 25 நாட்களில் கடந்த 6-ம் தேதி, வேலூரில் 105.98 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானதுதான் அதிகபட்ச வெப்பமாகும். இந்தாண்டு பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

முன்னதாக தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. தற்போது கத்திரி வெயில் முடிவுக்கு வந்திருப்பதால், வெப்பச்சலனத்தின் தாக்கம் குறைந்து பல இடங்களில் சற்று குளிர்ந்த சூழல் நிலவுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com