தூத்துக்குடிக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை
கனமழைபுதிய தலைமுறை - கோப்புப்படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல மீண்டு வரும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

இன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனை அடுத்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, “கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மின்சாதனப் பொருள்களை கவனத்துடன் கையாள வேண்டும். மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், ஆற்றில் குளிக்கவோ, கரையோரப் பகுதிகளுக்குச் செல்லவோ வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com