நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. விழுப்புரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மற்றும் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் மழை பெய்தது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை இன்றும் தொடர்ந்து பெய்து வருவதால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.