திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சிரமத்திர்கு ஆளாகி உள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த மூன்று நாட்களாக மழையில்லாத சூழலில், பகலில் கடும் பனி மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. இரவில் நீர் பனியாக விழுவதால் கூடுதல் குளிர் ஏற்பட்டுள்ளது. மழை தொடராத பட்சத்தில் குளிர் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பனிமூட்டத்தால் சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பனிமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

