\
சென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு 

சென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு 

சென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு 
Published on

சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மேலும் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி நேற்று இரவும் சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் மழை பெய்தது. முக்கிய இடங்களான தாம்பரம், கோயம்பேடு, அடையாறு, வேளச்சேரி, வில்லிவாக்கம், கொளத்தூர், ராயப்பேட்டை, காசிமேடு, திருவல்லிக்கேணி, சேலையூர், ஆலந்தூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், ஏர்போர்ட், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. 

இந்நிலையில், வடக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென் கடலோரத் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிசிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com