சென்னையில் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த வருடம் தென் மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்யும். வரும் 8-ம் தேதி வரை இயல்பை விட அதிகமாக மழை இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஒரு வாரத்தில் 4.2 செ.மீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 17 சதவீதம் கூடுதால பெய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது சென்னையில் அதிக மழை பதிவாகியுள்ளது.

