சற்றே தணிந்த வெயில் ! - தமிழகத்தில் இன்று 6 இடங்களில் சதமடித்த வெப்பநிலை

சற்றே தணிந்த வெயில் ! - தமிழகத்தில் இன்று 6 இடங்களில் சதமடித்த வெப்பநிலை

சற்றே தணிந்த வெயில் ! - தமிழகத்தில் இன்று 6 இடங்களில் சதமடித்த வெப்பநிலை
Published on

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் -ஐ தாண்டி பதிவாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 104.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கம் 104, திருச்சி 102.2, புதுச்சேரி 101.1, கடலூர் 100.5, கரூர் பரமத்தி 100.4 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகியிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com